ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர் இணையும் #OhManapenne படத்தின் ட்ரைலர் இதோ !

 ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர் இணையும் #OhManapenne படத்தின் ட்ரைலர் இதோ !

ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சிந்து சமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில், ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓ மணப்பெண்ணே’. இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். தெலுங்கில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘பெல்லி சூப்பலு’ படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் தயாராகி உள்ளது. கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கிருபாகரன் மேற்கொண்டுள்ளார்.

இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் வருகிற அக்டோபர் 22-ந் தேதி நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், படத்தின் ட்ரைலர் நேற்று (12.10.2021) வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ட்ரைலர், ஒரே இரவில் நான்கு லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

  • 32 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !