நந்தமுரி பாலகிருஷ்ணா & அனில் ரவிபுடியின் படத்திற்கு இசையமைக்கும் எஸ் தமன்…
ஹரிஷ் கல்யாண் ‘டீசல்’ படத்தின் மேக்கிங் வீடியோ!!

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ‘டீசல்’ படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டீசல்’. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்து வருகிறார். ‘அடங்காதே’ படத்தின் இயக்கிய சண்முகம் முத்துசாமி இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஆக்ஷன் ரொமான்ஸ் ஜேர்னரில் உருவாகும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் கேங்ஸ்டராகவும், அதுல்யா வழக்கறிஞராகவும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் இயக்குனர் வினய், தீனா, தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தாமஸ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார்.
தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.