‘தி கிரே மேன்’ படத்தில் தனுஷின் சண்டைக் காட்சி.. வைரலாகும் வீடியோ!

ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தி கிரே மேன்’. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர்.
இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் 2009-ல் வெளியான ‘தி கிரே மேன்’ என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாகி உள்ளது. ‘தி கிரே மேன்’ படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் தனுஷ் கதாபாத்திரத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தி கிரே மேன் படத்தை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இந்தியா வருகை தரவிருப்பதாக நேற்று வீடியோ பதிவின் மூலம் அறிவித்தனர்
இந்நிலையில் தி கிரே மேன் படத்தில் இடம்பெற்றுள்ள தனுஷின் சண்டைக் காட்சியை இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். ஹாலிவுட் நடிகர்களை தனுஷ் அடிக்கும்படியாக அமைந்திருக்கும் இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.