OTTயில் வெளியாகும் திருமணம் வீடியோ…டீசரை பகிர்ந்த ஹன்சிகா!!

 OTTயில் வெளியாகும் திருமணம் வீடியோ…டீசரை பகிர்ந்த ஹன்சிகா!!

தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

நடிகை ஹன்சிகாவின் திருமணம் ‘லவ் ஷாதி டிராமா’ என்ற தலைப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகை ஹன்சிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  • 11 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !