ஆர்யா நடித்த ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ !!
குஜராத் டைடன்ஸ் Vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – அறிமுகப் போட்டியில் கெத்து காட்டப்போவது யார்? ஒரு பார்வை !!

ஐபிஎல் அரங்கில் புதிதாக இணைந்துள்ள அணிகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று நடைபெறுகின்ற லீக் போட்டியில் பலப்பரீட்சை செய்கின்றன. இரு அணிகளுக்கும் இது முதல் போட்டி. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இருந்தாலும் இந்த அணிகளில் இடம் பெற்றுள்ள சில வீரர்களுக்கு இதற்கு முன்னதாக ஐபிஎல் விளையாடிய அனுபவங்கள் உண்டு.
லக்னோ அணியை பொறுத்த வரையில் அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் உடன் டிகாக் இன்னிங்ஸை தொடங்குவார் என தெரிகிறது. அதே போல ஸ்டாய்னிஸ், குர்ணால் பாண்ட்யா, தீபக் ஹூடா, ஹோல்டர் என தரமான ஆல்-ரவுண்டர்களும் அணியில் உள்ளனர். மணிஷ் பாண்டே, எவின் லூயிஸ் என அனுபவ வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். அதே போல பந்து வீச்சாளர்களை பொறுத்த வரையில் ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய், ஷபாஸ் நதீம், துஷ்ம்ந்த் சமீரா, ஆண்ட்ரூ டை மாதிரியான பவுலர்கள் அணியில் உள்ளனர்.
மறுபக்கம் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணியில் பவுலிங் யூனிட் செம ஸ்ட்ராங்காக உள்ளது. லூக்கி ஃபெர்க்யூஸன், அல்சாரி ஜோசப், டொமினிக் ட்ரேக்ஸ், முகமது ஷமி, வருண் ஆரோன், ரஷீத் கான், ஆர். சாய் கிஷோர், நூர் அகமது மாதிரியான வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். பேட்டிங்கில் ஷூப்னம் கில், மேத்யூ வேட், சாஹா, டேவிட் மில்லர் மாதிரியானவர்கள் உள்ளனர். விஜய் ஷங்கர், ராகுல் தெவாட்டியா போன்ற ஆல் ரவுண்டர்களும் அணியில் உள்ளனர்.
வான்கடேவில் இதுவரை நடைபெற்றுள்ள 84 ஐபிஎல் போட்டிகளில் 44 முறை இரண்டாவதாக பேட் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. அதனால் இந்த போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிகிறது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. அதற்கு இந்த சீசனின் முதல் போட்டியே சான்று. இரு அணிகளும் அந்த போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகளை இழந்திருந்தன. அதில் 6 விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றி இருந்தனர்.