‘நான் ராம் இல்லடா… தாகூத் இப்ராஹிம்’ – வைரலாகும் மோகன் படத்தின் கிளிம்ஸ்!

தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் ‘மோகன்’. தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் நடித்து வந்தார். 1999-ஆம் வெளியான ‘அன்புள்ள காதலுக்கு’ படத்தை இயக்கினார். கடைசியாக தமிழில் 2008-ஆம் ஆண்டு வெளியான ‘சுட்ட பழம்’ படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரத்தில் சில படங்களில் நடித்து வந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக ‘ஹரா’ படத்தில் நடித்து வருகிறார். குஷ்பூ, யோகி பாபு, சாருஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு லியாண்டர் லீ மார்டி இசையமைக்கிறார். கோவை எஸ்பி மோகன்ராஜ் தயாரிக்கும் இப்படத்தை விஜய் ஸ்ரீ இயக்குகிறார்.
இந்நிலையில் ‘ஹரா’ படத்தின் கிளிம்ஸ் காட்சி வெளியாகியுள்ளது. இந்த கிளிம்ஸ் காட்சியில் மோகன் ஸ்டைலாக தோன்றுகிறார். மேலும், ‘நான் ராம் இல்லடா… தாகூத் இப்ராஹிம்’ என்று மோகன் பேசும் வசனம் பலரது கவனத்தை பெற்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.