‘#விடுதலை’ படப்பிடிப்பில் இணைந்த கௌதம் மேனன்! வைரலாகும் போட்டோ !!

 ‘#விடுதலை’ படப்பிடிப்பில் இணைந்த கௌதம் மேனன்! வைரலாகும் போட்டோ !!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ திரைப்படத்தில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. 

‘அசுரன்’ படத்துக்குப் பிறகு சூரி நாயகனாக நடிக்கும் படத்தின் பணிகளைத் தொடங்கினார் வெற்றிமாறன். எல்ரெட் குமார் மற்றும் வெற்றிமாறன் இருவருடைய கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்றது. இதுவரை சுமார் 70% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் இப்போது நடக்கும் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டு அவர் சம்மந்தமான காட்சிகளில் நடித்து வருகிறார். இயக்கம், நடிப்பு என இரட்டைக் குதிரைகளில் இப்போது சவாரி செய்துவருகிறார் கௌதம் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 13 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !