தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் காம்போவில் ‘வாத்தி’ படத்தின் முழு பாடல்கள் விவரம்!!
விஷ்ணு விஷால் நடிப்பில் கட்டா குஸ்தி படம் எப்படி இருக்கு??ட்விட்டர் விமர்சனம் இதோ!!

இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் நடப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கட்டா குஸ்தி. காளி வெங்கட், கருணாஸ், முனீஸ்காந்த், கிங்ஸ்லீ உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை விஷ்ணு விஷால், ரவி தேஜா இணைந்து தயாரித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.
குஸ்தி சண்டையை லட்சியமாகக் கொண்ட நாயகி ஐஸ்வர்யா லஷ்மி, தனக்கு மனைவியாக வருபவருக்கு இருக்க வேண்டிய தகுதிகளாக இடுப்பு வரை கூந்தல், தன்னை விடக் குறைந்த படிப்பு என பட்டியலுடன் காத்திருக்கும் நாயகன் விஷ்ணு விஷால். இதில் குடும்ப நெருக்கடி காரணமாக நாயகன் விஷ்ணு விஷாலை மணக்க பொய் சொல்லி திருமணம் செய்து வைக்கப்படுகிறார் நாயகி ஐஸ்வர்யா லஷ்மி. இது விஷ்ணு விஷாலுக்கு தெரிய வர அதன்பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.
தமிழ் சினிமா பழக்கப்பட்ட கதைக்களம். ஆனால் எதை பேச இந்த கதைக்களத்தை இயக்குநர் தேர்வு செய்தார் என்பதிலிருந்து தனித்திருக்கிறது கட்டா குஸ்தி. படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இதுதான் கதை, இவர்கள்தான் கதாபாத்திரங்கள் என தேவையான விஷயங்களை இயக்குநர் தெரிவித்து விடுவதால் படம் எந்த சிக்கலும் இல்லாமல் நகருகிறது.காட்சிக்கு காட்சி காமெடி தெறிக்க திரையரங்கில் மக்களுக்கு நல்ல எண்டர்டெயின்மெண்டாக அமைந்திருக்கிறது திரைப்படம். நாயகியாக வரும் ஐஸ்வர்யா லஷ்மி மற்றும் நாயகன் விஷ்ணு விஷாலின் நடிப்பு படத்திற்கு நன்றாக கைகொடுத்துள்ளன. தனது மனைவி தன்னைப் பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என அவர் செய்யும் காரியங்களில் தொடங்கி தன் மனைவியாலேயே தனக்கு அவமானம் வருவதாக கருதுவது வரை விஷ்ணு விஷால் கச்சிதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.