இரண்டே நாளில் இவ்ளோ வசூல் செய்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’! #boxofficecollection எவ்ளளோ தெரியுமா?

 இரண்டே நாளில் இவ்ளோ வசூல் செய்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’! #boxofficecollection எவ்ளளோ தெரியுமா?

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு,தீபா உள்ளிட்ட பலரும் காமெடியான நடிப்பில் கவனம் ஈர்த்துள்ளனர்.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் டாக்டர். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். டாக்டர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயன் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் கடந்த 9 ஆம் தேதி வெளியான ’டாக்டர்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியடையும் என திரைத்துறையினர் கூறுகின்றனர். கொரோனா சூழலிலும் குடும்பங்களை தியேட்டருக்கு கொண்டுவந்துள்ளது ‘டாக்டர்’ என்று அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், ‘டாக்டர்’ வெளியான இரண்டே நாட்களில் தமிழகத்தில் 18 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதும் என்றும் வெளிநாடுகளில் 6 கோடி ரூபாயும், கர்நாடகா, ஆந்திராவில் 1 கோடிக்கு ரூபாய்க்கு மேலும் வட இந்தியாவில் 22 லட்ச ரூபாயும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தமாக சேர்த்து 27 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்று சொல்லப்படுகிறது.

  • 20 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !