#Diary டீஸர் 🔥 #அருள்நிதி படம் எல்லாம் வேறமாறி…

 #Diary டீஸர் 🔥 #அருள்நிதி படம் எல்லாம் வேறமாறி…

தமிழ் சினிமாவில் இன்றைய முன்னணி இளம் கதாநாயகர்களில் தனித்துவமான கவனத்தையும் ரசிகர்களின் நன்மதிப்பையும் பெற்றிருப்பவரான அருள்நிதி.

தமிழ் சினிமாவில் நட்சத்திர திரைக்கதை, வசனகர்த்தாவாக கோலோச்சிவிட்டு தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்த கலைஞர் மு.கருணாநிதியின் மகன் வழிப் பேரனான அருள்நிதி, கலைத் துறையில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

2009-ல் வெளியான ‘பசங்க’ படம் பரவலான பாராட்டுகளையும் வணிக வெற்றியையும் பெற்றது. தேசிய விருதையும் வென்றது. அந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். அவர் இரண்டாவதாக இயக்கிய ‘வம்சம்’ படத்தின் நாயகனாக தமிழ் சினிமாவில் முதல் தடம் பதித்தார் அருள்நிதி.

அதன் பின்னர் உதயன், மௌனகுரு, தகராறு உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்த ’களத்தில் சந்திப்போம்’ படம் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இதையடுத்து அவரின் அடுத்த படமான டைரியின் டீசர் நேற்று மாலை இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த படத்தை இன்னாச்சி பாண்டியன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.

  • 2071 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !