சிஎஸ்கே வெற்றிக்காகப் பிரார்த்தனை …. வைரலாகும் தோனி மகள் போட்டோ!

 சிஎஸ்கே வெற்றிக்காகப் பிரார்த்தனை …. வைரலாகும் தோனி மகள் போட்டோ!

தோனி- சாக்‌ஷி தம்பதியின் மகள் ஜிவா. சமுக வலைத்தளங்களில் ஜிவாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். மலையாளப் பாடலை அப்படியே அச்சுப்பிசகாமல் பாடியது, மழலைக் குரலில் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொல்லியது, அப்பாவுடன் சப்பாத்தி உருட்டியது  என ஜிவாவின் வீடியோக்கள் இணையதளங்களில் பரபரப்பைக் கிளப்பியது.

இந்நிலையில் தோனி மனைவி சாக்‌ஷி, மகள் ஜிவாவுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்து தோனி பேசுகையில், ”நாங்கள் 150 ரன்கள் வரை எட்டுவோம் என நினைத்தோம். ஆனால், எடுக்க முடியவில்லை. சில விக்கெட்டுகளை இழந்தபின் 15-ஆவது ஓவரிலிருந்து அடித்து ஆட நல்ல வாய்ப்புக் கிடைத்தும் எங்களால் ரன் எடுக்க முடியவில்லை. கிரவுண்ட் சற்று கடினமானதாக இருப்பதாக எனக்கு தோன்றியது” என்று கூறியுள்ளார்

இந்த கியூட் படம் வைரலாகியுள்ளது. வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை அள்ளியுள்ளது இந்தப் புகைப்படம். 

  • 24 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !