பீஸ்ட் படத்தில் தனுஷ்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

 பீஸ்ட் படத்தில்  தனுஷ்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

ஜார்ஜியாவில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா பரவல் காரணமாக தடைப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நடிகர் தனுஷ் எழுதவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அப்பாடலை தனுஷையே பாட வைக்க இசையமைப்பாளர் அனிருத் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போதுவரை இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இத்தகவல் உண்மையாக இருக்கவேண்டும் என்பதே விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  • 24 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !