கர்ணன் படத்தின் தெறிக்கவிடும் ‘உட்ராதீங்க யப்போவ்’ பாடல்…லேட்டஸ்ட் அப்டேட் !

 கர்ணன் படத்தின் தெறிக்கவிடும் ‘உட்ராதீங்க யப்போவ்’ பாடல்…லேட்டஸ்ட் அப்டேட் !

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லக்ஷ்மி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் மற்றும் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளனர். கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தற்போது முழுமையாக முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தற்போது விளம்பரப்படுத்தும் பணிகளைப் படக்குழு தொடங்கியுள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் “கண்டா வர சொல்லுங்க”, “மஞ்சனத்தி புராணம்”, “திரௌபதி முத்தம்” ஆகிய மூன்று பாடல்கள் நேரடியாக யூட்யூபில் வெளியிடப்பட்டு சிறந்த வரவேற்பை பெற்றன. அந்த வகையில் நான்காவது பாடலாக “உட்றாதீங்க எப்போவ்” என்ற பாடலை தயாரிப்பாளர் தாணு ட்விட்டர் வாயிலாக வெளியிட்டுள்ளார். இந்த பாடல் யூட்யூப் வீடியோவாக இல்லாமல் மியூசிக்காக மட்டும் பிரபல ஆன்லைன் இசை தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

  • 18 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !