தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ – வெளியானது சந்தோஷ் நாராயணன் பாடிய பாடல்!!

 தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ – வெளியானது சந்தோஷ் நாராயணன் பாடிய பாடல்!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் வருகிற 18 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களுக்கு பிறகு தனுஷ் – இயக்குநர் மிதர்ன் ஜவஹர் கூட்டணி இந்தப் படத்துக்காக இணைந்துள்ளனர். மேலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் – இசையமைப்பாளர் அனிருத் கூட்டணி இந்தப் படத்துக்காக இணைந்துள்ளனர் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

இந்தப் படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து தற்போது தேன்மொழி என்ற பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் தனுஷ் எழுதியுள்ள இந்தப் பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். 

  • 3 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !