போயஸ்கார்டன் to ஸ்டூடியோ; ரிகர்சலுக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைதட்டி பாடல்களை ரசித்தார்!
கொளுத்தும் கோடை வெயில் ! வதங்கும் டெல்லி மக்கள்!

நாடு முழுவதும் கோடைவெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. வட இந்திய மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிறப்பதற்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று தலைநகர் டெல்லியில் சப்தர்ஜங் பகுதியில் உள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், வெயில் அளவை வெளியிட்டது. அது அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்திருந்தது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி மைய மண்டல வானிலை மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘‘கடந்த 1945-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி, டெல்லியில் 104.7 டிகிரி வெயில் பதிவானது. அதன்பிறகு கடந்த 76 ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் டெல்லியில் இவ்வளவு அதிகமான வெயில் பதிவானது இதுவே முதல்முறை’’ என்றார்.
அதிலும் ஹரியானா, சண்டிகர், டெல்லி, சத்தீஸ்கர், ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்தை விட அங்கு 8 டிகிரி அளவு அதிக வெப்பம் நிலவ வாய்ப்புள்ளதாக முன்னரே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கின்றன.