பொன்னியின் செல்வன் -2′ டிரைலர் லோடிங்.. வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!
‘தசரா’ படத்தின் தணிக்கைச் சான்றிதழ், ரன்னிங் டைம் குறித்த அப்டேட்!

ஷியாம் சிங்கா ராய், அடடே சுந்தரா போன்ற வெற்றிப் படங்களை தொடர்ந்து நானி நடித்துள்ள தசரா படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படம் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கனடா, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள தசராவில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தை ஸ்ரீ காந்த் ஒடிலா இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ‘மாநகரம்’, ‘கைதி’ ப்டங்களின் புகழ் சத்தியன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஏற்கெனவே படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளது. குழந்தைகள் பெற்றோர்களுடன் இந்தப் படத்தினைப் பார்க்கலாம். படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 36 நிமிடம் என்பதும் குறிப்பிட்டத்தக்கது. தெலுங்கு படங்களான புஷ்பா, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்கள் தமிழகத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தசரா படத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.