பயமுறுத்தும் அருள்நிதியின் ‘டி-ப்ளாக்’ ஃபர்ஸ்ட் லுக் !

 பயமுறுத்தும் அருள்நிதியின் ‘டி-ப்ளாக்’ ஃபர்ஸ்ட் லுக் !

இன்று அருள்நிதியின் பிறந்தநாளையொட்டி அவர் நடித்து வரும் டி-ப்ளாக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் டிமாண்டி காலணி, ஆறாது சினம் உள்ளிட்ட பல்வேறு வித்தியாசமான படங்களில் நடித்து தனக்கென தனி பாணியை கொண்டவர் நடிகர் அருள்நிதி. இன்று அவரது பிறந்தநாளையொட்டி தற்போது அவர் நடித்து வரும் “டி ப்ளாக்” படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை விஜய் குமார் ராஜேந்திரன் எழுதி, இயக்கியுள்ளார். எம்.என்.எம் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அவந்திகா, அருள்நிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார், த்ரில்லர் கதைகளத்தை மையப்படுத்திய இந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

‘டைரி’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, இரண்டு படங்களைத் தொடங்கினார் அருள்நிதி. இதில் ஒரு படத்தை புதுமுக இயக்குநர் அரவிந்தும், மற்றொரு படத்தை விஜய் குமார் ராஜேந்திரனும் இயக்கி வந்தார்கள். இதில் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கியுள்ள படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 • 27 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !