கொரோனா தடுப்பு பணிகள்- மருத்துவ குழுவினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

 கொரோனா தடுப்பு பணிகள்- மருத்துவ குழுவினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவியதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

தினமும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் முழு ஊரடங்கு கடந்த மாதம் 24-ந்தேதியில் இருந்து பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 1-ந்தேதியில் இருந்து மேலும் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவுவது குறைந்துள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று எதிர் பார்த்த அளவுக்கு குறையவில்லை.

இதனால் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.இதையொட்டி இந்த மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன.

இதன் காரணமாக இங்கும் கொரோனா பரவுவது தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.தற்போது தமிழகத்தில் 26 ஆயிரம் பேர் ஒரு நாளைக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இறப்பு விகிதம் ஒரு நாளைக்கு 490 என்ற அளவில் உள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 2 லட்சத்து 91 ஆயிரத்து 131 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.தற்போது கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் நிறைய காலியாக உள்ளன.

 • 8 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !