ஓடிடி-யில் ‘கோப்ரா’ திரைப்படம் ரிலீசா?தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

 ஓடிடி-யில் ‘கோப்ரா’  திரைப்படம் ரிலீசா?தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார்.ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். AR ரஹ்மான் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் ‘கோப்ரா’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை {Netflix} நிறுவனம் பெற்றுள்ளது என்ற செய்தி சமூக வலைதளத்தில் பரவி வந்தது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பு 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் இந்த செய்து முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ளனர். மேலும் விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • 20 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !