‘#கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியானது

 ‘#கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியானது

நடிகர் விக்ரமின் கோப்ரா படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விக்ரம் கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்கிற சந்தேகம் வலுத்து வந்தது. இந்த சந்தேகங்களுக்கு காரணம் விக்ரமுக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு தான். சமீபத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து மருத்துவமனையும், அவரது மேலாளரும் அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில் விக்ரமுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விக்ரம் வீடு திரும்பினார். இதை அடுத்து நேற்று நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில் நாயகன் கலந்து கொள்வாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாசாக என்ட்ரி கொடுத்திருந்தார் விக்ரம்.

கோப்ரா படத்தை ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் விக்ரம் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதன் மூலம்ஸ்ரீநிதி செட்டி, இர்பான் உள்ளிட்டோர் தமிழுக்கு அறிமுகமாகிறார்கள்.

நேற்று சென்னையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. தற்போது படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளன. படத்தில் பா.விஜய், தாமரை, விவேக் ஆகியோர்கள் பாடல்களை எழுதியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பாடல்களை யூடியூப், ஸ்ப்பாடிஃபை, ஜியோ சாவன், ரெஸ்ஸோ, வின்க் மியூசிக், கானா, அமேசான் மியூசிக், ஆப்பிள் மியூசிக் ஆகிய செயலிகளிலும் கேட்கலாம் என படக்குழு தெரிவித்துள்ளனர். 

  • 9 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !