கொரோனா ஊரடங்கில் தளர்வு…போக்குவரத்துக்கு பச்சை கொடி காட்டிய முதல்வர் !

 கொரோனா ஊரடங்கில் தளர்வு…போக்குவரத்துக்கு பச்சை கொடி காட்டிய முதல்வர் !

சென்னை தலைமை செயலகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனையில் மருத்துவ குழு, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனையில் தொற்று அதிகமுள்ள 8 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்கலாம் என மருத்துவ குழுவினர் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் தொற்று குறைந்த மாவட்டங்களில் பெரிய வணிக நிறுவனங்கள், மால்களை திறக்கவும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

 • 19 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !