தங்கம் வென்றால் ரூ.3 கோடி – முதல்வர் அறிவிப்பு!

 தங்கம் வென்றால் ரூ.3 கோடி – முதல்வர் அறிவிப்பு!

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

18,000 வீரர்களில் 10,000 பேர் தடுப்புசி போட்டுக்கொண்ட நிலையில் மீதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

” விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளால் நாட்டுக்குப் பெருமை. வீரர்கள், தனித்தனியாக இருந்தாலும் போட்டிகளில் பங்கேற்க அணி ஒற்றுமை மிகவும் முக்கியம். விளையாட்டு வீரர்கள் அடுத்த தலைமுறைக்கு ஊக்கம் தரக்கூடியவர்கள்.

கொரோனா போன்ற தொற்று உங்களைப் போன்ற விளையாட்டு வீரர்களின் சாதனைக்கும், உங்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக இங்கே தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் இல்லத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது . இந்த சிறப்பு முகாமை அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயன்படுத்தி உங்கள் உடல் நலத்தை பேணிப்பாதுகாத்து விளையாட்டுக்களத்தில் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்திட வேண்டும் ” என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆக.8 வரை நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 6 வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார். 

ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் தமிழ்நாட்டு வீரருக்கு ரூ.3 கோடியும், வெள்ளிப்பதக்கம் வெல்பவருக்கு ரூ.2 கோடியும், வெண்கலப்பதக்கம் வெல்லும் வீரருக்கு ரூ.1 கோடியும் வழங்கப்படும் என்பதை தமிழக அரசின் சார்பில் இப்பரிசுத்தொகையை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அறிவித்துள்ளார்.c

 • 24 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !