அரசுப்பேருந்தில் திடீரென ஏறி விசிட் அடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் !சந்தோஷத்தில் பயணிகள்!!

 அரசுப்பேருந்தில் திடீரென ஏறி விசிட் அடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் !சந்தோஷத்தில் பயணிகள்!!

தமிழகத்தில் இன்றைய தினம் மெகா தடுப்பூசி முகாம் 6வது நாளாக நடைபெற்று வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் 5 இடங்களில் நடந்த சிறப்பு முகாமினை ஆய்வு செய்தார்.அப்போது தியாகராயா நகரில் இருந்து கண்ணகி நகருக்கு மாநகர பஸ் ஒன்று வந்தது.

அந்த பஸ்சில் மு.க.ஸ்டாலின் ஏறி அதில் பயணம் செய்த பெண்களிடம் இலவச பயணம் குறித்து விசாரித்தார்.அரசு வழங்கும் இலவச பயணம் வசதியாக இருக்கிறதா? குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வருகிறதா? இருக்கைகள் வசதியாக உள்ளதா? என்று அவர் கேட்டார். அதற்கு அவர்கள் இலவச பயணம் எங்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை மனுக்களையும் கொடுத்தனர். அதை அவர் அன்போடு வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இந்த ஆய்வின்போது தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி, வீரராகவ ராவ் ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

  • 17 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !