மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள பிரம்மாண்டமான வரலாற்று படம் ‘மரைக்கார் ; அரபிக்கடலின்டே சிம்ஹம்’. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கேரள கடற்படை தலைவனான குஞ்சாலி மரைக்காயர் என்பவரின் வீரதீர சாகச வரலாறாக இந்தப்படம் உருவாகியுள்ளது. இதில் மரைக்காயர் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், பிரணவ் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், அசோக்செல்வன், சுகாசினி உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் […]