நடிகர் விக்ரம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!!

தமிழ் சினிமாவில் பிரபலமாக விளங்கும் நடிகர் விக்ரம் சிறப்பு வேடங்களில் ரசிகர்களை கவர்ந்தவர். இந்நிலையில் அவருக்கு இன்று பிற்பகலில் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை குடும்பத்தினர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விக்ரம் உடலை பேணி பாதுகாப்பதில் சிரத்தை எடுப்பவர். அவருக்கே மாரடைப்பா என்று அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நடிகர் விக்ரம் தற்போது மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரமுக்கு வயது 56.தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படத்தில் விக்ரம் ‘ஆதித்ய கரிகாலன்’ கதா பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது