தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் காம்போவில் ‘வாத்தி’ படத்தின் முழு பாடல்கள் விவரம்!!
வித்தியாசம் காட்டிய சேரன்.. மக்கள் வெளியிட்ட போஸ்டர்!!

பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் நடித்துள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை வித்தியாசமான முறையில் ஆட்டோ ஓட்டுனர்கள், தூய்மை பணியாளர்கள், துணை நடிகர் நடிகைகள் வெளியிட்டுள்ளனர்.