தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் காம்போவில் ‘வாத்தி’ படத்தின் முழு பாடல்கள் விவரம்!!
டாப்ஸியின் நடிக்கும் ‘ப்ளர்’ படத்தின் டிரைலர் வெளியீடு!

நடிகை டாப்ஸியின் ‘ப்ளர்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது.
கடந்த 2010ஆம் ஆண்டு ஸ்பானீஷ் மொழியில் வெளியான திரில்லர் திரைப்படமான ‘ஜூலியாஸ் ஐஸ்’ படத்தின் ரீமேக்கான ஹிந்தியில் தயாராகியுள்ளது ப்ளர் திரைப்படம்.டாப்ஸி, குல்சன் தேவ்வையா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பிரபல இயக்குநர் அஜய் பாஹல் இயக்கியுள்ளார். இந்த படத்தை டாப்ஸியும் இணைந்து தயாரித்துள்ளது கூடுதல் சிறப்பு.
ப்ளர் திரைப்படம் நேரடியாக டிசம்பர் 9ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தற்போது ப்ளர் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது.