வைல்டு கார்டு என்ட்ரியாக #Biggbossவீட்டுக்குள் செல்ல உள்ள பிரபல நடிகை – யார் தெரியுமா?

 வைல்டு கார்டு என்ட்ரியாக #Biggbossவீட்டுக்குள் செல்ல உள்ள பிரபல நடிகை – யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு 50 லட்சம் ரூபாய் பணமும் பிக்பாஸ் ட்ரோபியும் பரிசாக வழங்கப்படும்.

வழக்கமாக 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். அடுத்தடுத்து வைல்டு கார்ட் என்ட்ரி என சில போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள். ஆனால் இம்முறை ஆரம்பத்திலேயே பிக்பாஸ் வீட்டுக்குள் 18 போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்துள்ளனர். இதில் 10 பெண் போட்டியாளர்கள், 7 ஆண் போட்டியாளர்கள், 1 திருநங்கை .

முதல் வார இறுதியில் திருநங்கை நமீதா மாரிமுத்து, மருத்துவ காரணங்களுக்காக திடீரென வெளியேறினார். அதுமட்டுமின்றி முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாததால் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர். 

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் கலந்துகொள்வது வழக்கம். 40 அல்லது 50 நாட்கள் கடந்த பின்னரே வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள். ஆனால் தற்போது முதல் வாரத்திலேயே நமீதா மாரிமுத்து வெளியேறியதால், அவருக்கு பதில் ஒரு வைல்டு கார்டு போட்டியாளரை உள்ளே அனுப்ப உள்ளார்களாம்.

அதன்படி வருகிற அக்டோபர் 16-ந் தேதி நடிகை ஷாலு ஷம்மு வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 26 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !