உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசு வழங்கி மகிழ்வித்த வெற்றிமாறன்?!
சீரியலுக்கு வந்த பிக்பாஸ் பிரபலம்! எந்த சீரியலில் தெரியுமா?

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த அனிதா சம்பத், விஜய் டிவி-யில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பை ஏற்று வேலையை விட்டுவிட்டு ரூட்டை மாற்றினார். எதற்கெடுத்தாலும் அழுகை, கோபம் என ரசிகர்களிடம் நெகட்டிவ் கமெண்டுகளைப் பெற்றார். இருப்பினும் டாஸ்க்குகளில் நேர்மையுடன் விளையாடி ஆதரவையும் பெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் யூடியூப் சேனலில் தனது கணவருடன் இணைந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வீடியோக்களுக்கு ரசிகர்களின் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.
இந்த நிலையில் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சில்லுனு ஒரு காதல்’ என்ற சீரியலில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க அனிதா சம்பத் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் விரைவில் அவரது காட்சி எபிசோடு ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. இதேபோல் விஜய் டிவியிலும் அவர் சீரியலில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.