‘SK20’ படத்தில் இணையும் அனிதா சம்பத்?வெளியான புதிய அப்டேட்!

 ‘SK20’ படத்தில் இணையும் அனிதா சம்பத்?வெளியான புதிய அப்டேட்!

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் டான் படத்திலும், இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் அயலான் படத்திலும் நடித்துமுடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணியில் உள்ளது. இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தாக இயக்குநர் அனுதீப் இயக்கம் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

தற்காலிகமாக ‘எஸ்.கே 20’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் பிக் பாஸ் புகழ் அனிதா சம்பத் ‘எஸ்.கே 20’ படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானார். அதன் பிறகு ஓரிரு படங்களில் நடித்து வரும் அனிதா சம்பத் அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 110 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !