‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு எப்போது..? எங்கே..?

 ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு எப்போது..? எங்கே..?

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருந்த நடிகர் விஜய், தன்னுடய அடுத்த படத்திற்காக ‘கோலமாவு கோகிலா’ படப்புகழ் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்தார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். ‘தளபதி 65’ எனத் தாற்காலிகமாகப் பெயரிட்டு பூஜையுடன் சென்னையில் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா விரைந்தது. 

அங்கு படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக படக்குழு இந்தியா திரும்பியது. இந்த நிலையில், ‘தளபதி 65’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

அதன்படி, ‘பீஸ்ட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகிவரும் நிலையில், நிறுத்திவைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளது.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • 8 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !