போயஸ்கார்டன் to ஸ்டூடியோ; ரிகர்சலுக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைதட்டி பாடல்களை ரசித்தார்!
நெல்சன் திலீப்குமாரின் மாஸ் காமெடியில் மொத்த ரெக்கார்ட்ஸையும் ஒரு நாளுக்குள் முறியடித்த #பீஸ்ட் ட்ரைலர்!!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சமீபத்தில் வெளியான ‘அரபிக்குத்து’ மற்றும் ‘ஜாலியோ ஜிமிக்கானா’ பாடலால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஆகிய மொழிகளில் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. தீவிரவாதிகள் மக்களை கடத்தி வைத்து அரசாங்கத்திற்கு கோரிக்கை வைக்கும் மாதிரியும், அதனை கதாநாயகன் விஜய் மீட்கும் வகையில் வெளியாகியுள்ள இந்த ட்ரைலர் பலரின் கவனத்தை பெற்று வருகிறது. இப்படம் வெளியாகும் அதே நாளில் கே.ஜி.எஃப் 2 படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.