பொன்னியின் செல்வன் -2′ டிரைலர் லோடிங்.. வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!
இந்தி, தெலுங்கில் ரீமேக் ஆகிறது அயோத்தி!!வெளியான சூப்பர் அப்டேட் !!

அயோத்தி திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரத்தை மையமாக வைத்து மதப் பிரச்னைகளைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை மந்திர மூர்த்தி இயக்கியுள்ளார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் சசிகுமாருடன் ‘குக் வித் கோமாளி’ புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். அயோத்தி திரைப்படம் மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதை அடுத்து, இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இந்தியில் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாகவும் தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க இருப்பதாகவும் இரண்டு மொழிக்கும் ‘அயோத்தியா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் வெளியாக இருக்கிறது.