தனுஷ் நடிக்கும் ‘AtrangiRe’ திரைப்பட டிரெய்லர் !வெளியான லேட்டஸ்ட் !!அப்டேட் வைரலாகும் போஸ்டர் …

 தனுஷ் நடிக்கும் ‘AtrangiRe’ திரைப்பட டிரெய்லர் !வெளியான லேட்டஸ்ட் !!அப்டேட் வைரலாகும் போஸ்டர் …

ராஞ்சனா படத்தின் மூலம் தனுஷை இந்தியில் அறிமுகப்படுத்தியவர் ஆனந்த் எல்.ராய். அவரது இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம்தான் அத்ரங்கி ரே. உடன் சாரா அலிகான், அக்ஷய் குமார் நடித்திருக்கிறார்கள்.

இசை ஏ.ஆர்.ரஹ்மான். டி சீரிஸ், கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ், கேப் ஆஃப் காட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன.அத்ரங்கி ரே படத்தை 2021 பிப்ரவரி 14 வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடியாததால் அந்த தேதியில் படத்தை வெளியிட முடியவில்லை. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்த போது கொரோனா இரண்டாம் அலை உக்கிரம் பெற்றிருந்தது. பிறகு ஆகஸ்ட் 6 படம் வெளியாகும் என்றனர். அந்த தேதியிலும் படம் வெளியாகவில்லை.

தமிழில் தனுஷுக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் படத்தை தமிழில் வெளியிடுகின்றனர். தமிழ்ப் பதிப்புக்கு கலாட்டா கல்யாணம் என்ற பெயரை தேர்வு செய்திருப்பதாக கேள்வி. 1968 இல் சிவாஜி கணேசனும், ஜெயலலிதாவும் கலாட்டா கல்யாணம் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதே பெயரை இப்போது தனுஷ் படத்துக்கு தேர்வு செய்துள்ளனர்.

இந்நிலையில், படம் ஓடிடியில் டிஸ்னி’ஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது மேலும் படத்தின் ட்ரைலர் நாளை வெளியாக உள்ளது.

  • 9 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !