#அஸ்வின், #புகழ் இணைந்து நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்!

 #அஸ்வின், #புகழ் இணைந்து நடிக்கும்  ‘என்ன சொல்ல போகிறாய்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்!

‘குக் வித் கோமாளி’ அஸ்வின், புகழ் இணைந்து நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

தமிழ் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்தவர்கள் என்றால், அது சிவாங்கி, புகழ், அஸ்வின் உள்ளிட்டவர்கள்தான்.

இந்நிகழ்ச்சியில், பிரபலமடைந்ததால் சிவாங்கி, புகழ் இருவரும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார்கள். புகழ் அஜித்தின் ‘வலிமை’ படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில்தான் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி முடிவடைந்தது.

இதனால், அஸ்வினும் புகழும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். அஸ்வின் ஹீரோவாகவும் புகழ் நகைச்சுவை நடிகராகவும் நடிக்கவுள்ள இப்படத்தின் அறிவிப்பு புத்தாண்டையொட்டி வெளியானது. இந்த நிலையில், இவர்கள் நடிக்கும் படத்திற்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ என்று தலைப்பு வைத்து அதிகாரபூர்வமாக வெளியிட்டது படக்குழு. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

அடுத்த கட்ட பட பிடிப்பு இன்று தொடங்கியது படத்தின் ஷூட்டிங் போட்டோஸ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது

  • 270 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !