அருண்விஜய் அடித்த ஸ்டண்ட்… மிரண்டுபோன மாஸ்டர்!

 அருண்விஜய்  அடித்த ஸ்டண்ட்… மிரண்டுபோன   மாஸ்டர்!

‘மூடர் கூடம்’ படத்தை இயக்கி தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நவீன் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் ‘அக்னி சிறகுகள்’. அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு, நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி. சிவா தயாரிக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த 2018ஆம் ஆண்டு வெளியிட்டு, இப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன் பிறகு, படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, கொல்கத்தா மற்றும் யூரோப்பில் படப்பிடிப்புபை நடத்தியது.

பல்வேறு காரணங்களால் இப்படத்தின் பணிகள் பலமுறை தடைப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தின் பணிகள் மீண்டும் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. சில தினங்களுக்கு முன்பு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், ‘அக்னி சிறகுகள்’ படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் குறித்து இயக்குநர் நவீன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  • 1045 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !