மகளுடன் கோலி-அனுஷ்கா தம்பதி: வைரலாகும் புகைப்படம்!

 மகளுடன் கோலி-அனுஷ்கா தம்பதி: வைரலாகும் புகைப்படம்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இத்தாலியின் மிலன் நகரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நேற்று திருமணம் நடைபெற்றது. கோலியும், அனுஷ்காவும் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்த நிலையில் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி இத்தாலியில் கோலாகலமாக திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகும் நடிப்பு, தயாரிப்பு என அனுஷ்கா சர்மா பிசியாக இருந்தார். அதேபோல் கோலியும் இந்திய அணியின் கேப்டன் என்ற பொறுப்பை தாங்கி வந்தார். இந்நிலையில் அனுஷ்கா சர்மாவிற்கு கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும், எங்களுடைய பர்சனல் நேரத்திற்கு நீங்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் விராட் கோலி அறிவித்தார்.

இதை அடுத்து தற்போது, புனே விமான நிலையத்தில் மகளுடன் இருக்கும் அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதனை விராட் கோலியோ, அனுஷ்கா ஷர்மாவோ பகிரவில்லை. புனே விமான நிலையத்தில் இருந்த ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டார். அது தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசிப் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றிபெற்று கோப்பையைத் தட்டித் தூக்கியது குறிப்பிடத்தக்கது.

 • 17 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !