அமலா பால் நடிப்பில் உருவாகும் ‘குடியெமைதே’… ரிலீஸ் தேதி!

 அமலா பால் நடிப்பில் உருவாகும் ‘குடியெமைதே’… ரிலீஸ் தேதி!

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

இதையடுத்து இப்போது தொடர்ச்சியாக துணிச்சலான மற்றும் சர்ச்சையானக் கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடித்து வந்தாலும் பெரிய அளவுக்கு வாய்ப்புகள் இல்லை. இதையடுத்து இப்போது அவர் வெப் தொடர்களில் அதிக அளவில் நடித்து வருகிறார்.

லூசியா மற்றும் யு டர்ன் ஆகிய படங்களின் இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் அவர் குடியெமைதே என்ற வெப் தொடரில் நடித்தார். அந்த சீரிஸ் விரைவில் ஆஹா ஓடிடியில் வெளியாக உள்ளதாக இப்போது பவன் குமார் அறிவித்துள்ளார்.

 • 7 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !