ட்ரெண்டிங்கில் #AKUKTrip.. அஜித் லண்டனுக்கு பறந்தது ஏன்? – வைரல் ஃபோட்டொஸ்!

 ட்ரெண்டிங்கில் #AKUKTrip.. அஜித் லண்டனுக்கு பறந்தது ஏன்? – வைரல் ஃபோட்டொஸ்!

வலிமை படத்தை தொடர்ந்து அதே கூட்டணி AK 61க்காக ஒன்றிணைந்திருக்கிறது. அதன் படபிடிப்புகள் ஐதராபாத், புனே என விறுவிறுப்பாக நடந்து வருகிறது.அநேகமாக AK61 நடப்பாண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட் எதையும் வெளியிடாமல் வழக்கம் போல படக்குழு கப்-சிப் என ரகசியத்தை காத்து வருகிறது.

இதனிடையே இந்த படத்துக்கு அஜித்குமார் தனது உடல் எடையை குறைத்திருப்பதால் அது தொடர்பான ஃபோட்டோக்கள் மட்டும் சமூக வலைதளத்தில் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகிறது.

இந்தநிலையில் ak61க்கான ஷூட்டிங் பாதி முடிந்திருப்பதால் அஜித் தனது சொந்த காரணங்களுக்காக லண்டனுக்கு பறந்திருக்கிறார்.அங்கு தனது பைக் ட்ரிப்பாக அஜித் சென்றிருக்கிறார் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து லண்டனில் bike ride குழுக்களுடன் அஜித் இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

மேலும் அந்த புகைப்படங்களை #AKUKTrip என்ற ஹேஷ்டேகின் கீழ் பதிவிட்டு ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். Euro Tunnel ரயிலில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் தற்போது சமூக வலைதளங்களில் வட்டமடித்து வருகிறது. லண்டன் பயணம் முடிந்த பிறகு மீண்டும் ak61 படபிடிப்பில் அஜித்குமார் கலந்துக்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

 • 43 Views

  In and Out Staff

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !