பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பாலிவுட் படத்தில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர், தனது கணவர் தனுஷ் மற்றும் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனை வைத்து ‘3’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து, நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் மற்றும் பிரியா ஆனந்தை வைத்து, ‘வை ராஜா வை’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.
பின்னர், நீண்ட காலமாக படங்கள் ஏதும் இயக்காதநிலையில், அண்மையில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் மியூசிக் ஆல்பம் ஒன்றை இயக்கியிருந்தார். இந்த ஆல்பம் கடந்த கடந்த 17-ம் தேதி வெளியானது. இதன்பிறகு, சிம்பு, லாரன்ஸ் ஆகிய இருவரில் ஒருவரை வைத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படம் ஒன்றை இயக்கப்போவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது இந்தி திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.