ஆர்யா நடித்த ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ !!
‘#YASHIKA’ கார் விபத்தின் போது நடந்தது என்ன? அதிர்ச்சி வாக்குமூலம்!

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சி இவரை மேலும் பிரபலமடைய வைத்தது.
யாஷிகா சனிக்கிழமை இரவு கிழக்கு கடற்கரைச் சாலையில் பயணம் மேற்கொண்டுள்ளார். திடீரென மகாபலிபுரம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயம் அடைந்தார் என்பதும் அவரது தோழி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாஷிகாவிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த வாக்குமூலத்தில் காரை ஓட்டி வந்தது யாஷிகா தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் கார் ஓட்டும்போது மதுபோதையில் இல்லை என்பதும் மருத்துவ பரிசோதனையில் இருந்து தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானதாகவும் அந்த காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி சீட்பெல்ட் அணியாததால் காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் அவருடைய வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விபத்தில் யாஷிகாவின் இடுப்பு எலும்பு மற்றும் வலது கால் எலும்பு முறிவு அடைந்ததாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது யாஷிகாவின் நெருங்கிய தோழியாக இருந்த ஐஸ்வர்யா தத்தா அவரை நேரில் சந்தித்து யாஷிகா நலமாக இருப்பதாகவும் விரைவில் அவர் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.