பொன்னியின் செல்வன் -2′ டிரைலர் லோடிங்.. வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!
‘உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உலகம்.. உச்சிக்கு வந்தால் திட்டித் தீர்க்கும்…’ வைரலாகும் விக்ரம் ட்வீட்!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த புகைப்படமும் வைரலானது. சில தினங்களுக்கு முன்பு நடிகர் விக்ரம் ‘தங்கலான்’ கெட்டப்பில் இருக்கும் புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ‘உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உலகம்.. உச்சிக்கு வந்தால் திட்டித் தீர்க்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.