ஆர்யா நடித்த ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ !!
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இரண்டு OTT தளங்களில் வெளியானது ‘#பீஸ்ட்’!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இன்னும் தியேட்டர்களில் ரசிகர்கள் பீஸ்ட் மோடில்தால் படையெடுத்து வருகிறார்கள். ஆனாலும், பான் இந்தியா படமாக வெளியானாலும் ‘கேஜிஎஃப் 2’ வசூலை பீஸ்ட்டால் ஃபீட் பண்ண முடியவில்லை. பட வெளியீட்டின்போது வந்த எதிர்மறை விமர்சனங்களால் ‘கேஜிஎஃப் 2’ படத்திற்கு தியேட்டர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்கள் எண்ணிக்கையும் கூடியது. இதனால், ‘பீஸ்ட்’ ஓடிடியில் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று காத்திருந்தனர் பல நெட்டிசன்கள்.
’பீஸ்ட்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. அதன்படி, சரியாக படம் வெளியாகி 1 மாதம் கழித்து சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் நெட்ஃப்ளிக்ஸிலும் இன்று வெளியாகியுள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம்,தெலுங்கு, இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது என்பதை நெட்ஃப்ளிக்ஸும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களும் அதிகாரபூர்வமாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்கள்.
1 Comment
Best samma super