முடிவுக்கு வந்த பிரச்சனை…!மீண்டும் சினிமாவில் #வடிவேலு!!

 முடிவுக்கு வந்த  பிரச்சனை…!மீண்டும் சினிமாவில் #வடிவேலு!!

வடிவேலு புதிய படங்களில் நடிக்கத் தடைவிதிக்கப்பட்டது.  இதனால் 2 வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்காமல் இருக்கிறார். தற்போது இந்த பிரச்சினையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டு  2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வடிவேலு மீண்டும் நடிக்கவுள்ளார். 

இந்தநிலையில்,  தந்தி டிவிக்கு நடிகர் வடிவேலு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:-

என் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியவர் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன். என்னை மீண்டும் திரைக்கு கொண்டுவந்ததன் மூலம் சுபாஷ்கரன் சபாஷ்கரன் ஆகிவிட்டார். 

மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது முதன் முதலில்  நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு. என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத்துள்ளார்கள். 

நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு தடையை நீக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மறு பிறவி. சுராஜ் இயக்கும் நாய் சேகர் படத்தில் செப்டம்பர் முதல் நடிக்க உள்ளேன்.  2 படங்களில் கதாநாயகனாக நடித்து விட்டு பின்னர் காமெடியனாகவும் நடிக்க உள்ளேன் என்றார்.

  • 147 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !