போயஸ்கார்டன் to ஸ்டூடியோ; ரிகர்சலுக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைதட்டி பாடல்களை ரசித்தார்!
இரண்டு #OTT தளங்களில் கலக்க வரும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜெய் பீம்’ வெற்றிக்குப்பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ கடந்த மார்ச் 10 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இமான் இசையமைத்திருக்கிறார். சத்யராஜ், வினய், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப்பிறகு தியேட்டரில் வெளியான சூர்யா படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு இருந்தது.
அதனை நிறைவேற்றும் விதமாகவே சூர்யா ரசிகர்கள் இதயங்களில் இடம்பிடித்து பாராட்டுக்களைக் குவித்தது. குறிப்பாக, பெண்ணியவாதிகள் ’எதற்கும் துணிந்தவன்’ பெண்களுக்கு எதற்கும் துணியும் துணிச்சலைக் கொடுத்தது என்று கொண்டாடினார்கள்.
அதேசமயம், சினிமா விமர்சகர்கள் இப்படம் தங்களை ஈர்க்கவில்லை என்று கலவனையான விமர்சங்களையும் கொடுத்தனர். ‘ஜெய் பீம்’ படத்திற்கு வந்த எதிர்ப்பால் பல மாவட்டங்களில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு பகீரங்கமாகவே மிரட்டல்கள் வந்தன. இதனால், பல தியேட்டர்கள் கூட்டம் இல்லாமல் காட்சியளித்தது.
ஆனால், அவர்களால் ஓடிடியில் காண்பவர்களை தடை செய்ய முடியாது அல்லவா? என்று கொண்டாடக் காத்திருக்கிறார்கள் சூர்யா ரசிகர்கள். சூப்பர்/சுமார் என்று விமர்சனங்கள் வந்தாலும் ஆண்களுக்கும் சமூகத்திற்கும் நல்ல விஷயங்களைக் கொடுத்திருக்கிறோம் என்றே பேட்டிகளில் குறிப்பிட்டு வந்தனர் படக்குழுவினர்.
1 Comment
லூசு கூ(ப்பிடுங்கள் ),எந்த தேதிலடா வரும்…..