போயஸ்கார்டன் to ஸ்டூடியோ; ரிகர்சலுக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைதட்டி பாடல்களை ரசித்தார்!
“‘வாடிவாசல்’ திறக்க நானும் காத்திருக்கிறேன்” – நடிகர் சூரி ட்வீட்

‘அசுரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இளையராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தில் உதவி இயக்குநராக நடிகர் கருணாஸ் பணியாற்றி வரும் நிலையில் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஒத்திகை நேற்று(20.3.2022) பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில், ஒத்திகை படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சூரி, “அண்ணன் வெற்றிமாறன் – அண்ணன் சூர்யா மிரட்டும் “வாடிவாசல்” டெஸ்ட் ஷூட்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரம் விளைஞ்ச நம்மண்ணின் பாரம்பரிய விளையாட்டின் பெருமையை உலகறியச் செய்யும் இந்தக் காவியம். வாடிவாசல் திறக்க நானும் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.