“அண்ணா உங்களுடன் நடனமாடி மீண்டும் சாதனை படைப்பேன்” – ராம் சரண்!!

 “அண்ணா உங்களுடன் நடனமாடி மீண்டும் சாதனை படைப்பேன்” – ராம் சரண்!!

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

சமீபத்தில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில், சிறந்த பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து படக்குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ராம் சரண் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் நம் வாழ்விலும் இந்தியன் சினிமாவிலும் சிறந்த திரைப்படமாக எப்போதும் இருக்கும். நான் இப்பொழுதும் கனவில் இருப்பது போல் உணர்கிறேன்.

உங்களின் அளவற்ற அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் கீரவாணி இருவரும் இந்திய திரையுலகின் விலைமதிப்பற்ற ரத்தினங்கள். இந்த சிறந்த படைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பை அளித்ததற்கு இருவருக்கும் நன்றி. நாட்டு நாட்டு என்பது உலகம் முழுவதும் இருக்கும் ஒரு உணர்வு. இந்த உணர்வை ஒருங்கிணைத்த பாடலாசிரியர் சந்திரபோஸ் , பாடகர்கள் ராகுல் சிப்லிகுன்ச் மற்றும் கால பைரவா மற்றும் நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித் ஆகியோருக்கு நன்றி.

 • 24 Views

  In and Out Staff

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !