குலதெய்வ கோயிலில் நடிகா் பிரபு குடும்பத்தினருடன் வழிபாடு!!

மன்னாா்குடியில் உள்ள குலதெய்வ கோயிலில் நடிகா் பிரபு குடும்பத்தினருடன் புதன்கிழமை வழிபட்டாா்.
நடிகா் திலகம் சிவாஜிகணேசனின் சொந்த ஊா் மன்னாா்குடியை அடுத்துள்ள வேட்டைதிடல். மன்னாா்குடி புதுப்பாலத்தில் உள்ளஅங்காளபரமேஸ்வரி கோயில் இவரது குலதெய்வ கோயில் ஆகும். இக்கோயிலில் சிவாஜிகணேசனின் மகனும் திரைப்பட நடிகருமான பிரபு, அவரது மனைவி புனிதா, இவா்களது மகன் விக்ரம் பிரபு, இவரது மனைவி இலக்குமி உச்ஜெனி இவா்களது மகன், மகள் ஆகியோா் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.