ஹாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு திரும்பிய தனுஷ் ?ஏன் தெரியுமா !

 ஹாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு திரும்பிய தனுஷ் ?ஏன் தெரியுமா !

ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கிய ரஸோ பிரதர்ஸ் இயக்கும் தி க்ரே மேன் படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தமானார். அதை தொடர்ந்து சில மாதங்கள் முன்னர் அமெரிக்கா சென்ற தனுஷ் தொடர்ந்து க்ரேமேன் படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்தார்.

தனுஷின் அடுத்த படமான ‘D43’ என்ற திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார் என்பதும் ஏற்கனவே ஒரு சில கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் ‘D43’ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பும் தனுஷ் ஒரு சில நாட்களில் ஹைதராபாத்திற்கு ‘D43’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 4 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !