அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்த்!எப்போ தெரியுமா ?

 அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்த்!எப்போ தெரியுமா ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக சென்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை அவர் சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் உடல் பரிசோதனை செய்வதற்காக அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார். இதனை அடுத்து அவருக்காக தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதும் அந்த விமானம் அமெரிக்கா செல்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் அங்கு உடல் பரிசோதனை செய்து கொண்டார் என்றும், அவர் மயோ கிளினிக் என்ற மருத்துவமனையிலிருந்து தனது மகளுடன் வெளியே வரும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரல் ஆனது என்பதும் அதன் பின்னர் அமெரிக்க ரசிகர்களுடன் ரஜினிகாந்த் பேசியவாறு இருந்த புகைப்படங்களும் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இதன் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி அமெரிக்காவில் இருந்து நாளை அதிகாலை ரஜினிகாந்த் சென்னை திரும்ப உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில் நாளை ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார் என்ற தகவல் ரஜினி ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

  • 9 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !